ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் ஒன்றை பிரெஞ்சு கடற்படை கைப்பற்றியது!!
1 ஆனி 2026 திங்கள் 14:26 | பார்வைகள் : 283
ரஷ்யாவின் "flotte fantôme"படையைச் சேர்ந்த "Tagor" என்ற எண்ணெய் கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் இந்த நடவடிக்கை பிரிட்டன் உள்ளிட்ட கூட்டாளி நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது எனவும் ஜனாதிபதி Emmanuel Macron தெரிவித்துள்ளார்.
சர்வதேச தடைகளை மீறி செயல்படும் கப்பல்கள், கடல்சார் சட்டங்களை மீறுவதோடு மட்டுமல்லாமல், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு நிதியளிப்பதாக மக்ரோன் குற்றம்சாட்டிள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது இந்த ஆண்டில் நடைபெற்ற முதல் நடவடிக்கை அல்ல. ஜனவரியில் மத்தியதரைக் கடலில் "le Grinch" என்ற கப்பலும், மார்சில் வட கடலில் மற்றொரு ரஷ்ய எண்ணெய் கப்பலும் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடன் கைப்பற்றப்பட்டன.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் போருக்குப் பிறகு விதிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி தடைகளைத் தவிர்க்க ரஷ்யா பழைய மற்றும் உரிமையாளர் விவரங்கள் தெளிவில்லாத கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நூற்றுக்கணக்கான கப்பல்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan