Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசில் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசில் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கம்

1 ஆனி 2026 திங்கள் 12:53 | பார்வைகள் : 136


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையும் இணைந்து பணியாற்றும் வகையில் கூட்டு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில், ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., அனிதா ஹூசைன் தலைமையில் செயல்படுகிறது.

இப்பிரிவுடன், மகளிர் போலீஸ் நிலையங்கள், மனிதர்கள் கடத்தல் பிரிவு,  பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு, சிறார்கள் தொடர்பான சிறப்பு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன.

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, புதிதாக, ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டு உள்ளது.

இப்பிரிவு போலீசாரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து பணியாற்ற, கூட்டு நடவடிக்கை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீசார், மாநிலம் முழுதும் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் தான், குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

அதற்காக, கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.