நிலவின் பள்ளங்களை துல்லியமாக கண்டறிந்து ஆராயும் ஏஐ கண்டுபிடிப்பு
1 ஆனி 2026 திங்கள் 06:03 | பார்வைகள் : 175
நிலவின் பள்ளங்களை மிகத்துல்லியமாக கண்டறிந்து ஆராயும் ஏஐ தொழில்நுட்பத்தை இஸ்ரோ உதவியுடன் பிஐடி மெஸ்ரா பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
நிலவை ஆய்வை செய்ய இந்தியா உள்பட பல்வேறு முன்னணி நாடுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில ஆய்வுகள் மிகவும் சவால்மிக்கதாக விஞ்ஞானிகளுக்கு இருந்துள்ளது.
இந்த சூழலில், அவர்களுக்கு உதவும் விதமாக, நிலவின் பள்ளங்களை துல்லியமாக கண்டறிந்து ஆய்வு செய்யும் ஏஐ தொழில்நுட்பத்தை, இஸ்ரோவின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த பிஐடி மெஸ்ரா குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் சஞ்சிதா பால், டாக்டர் மிலி கோஷ் மற்றும் மிமான்சா சின்ஹா ஆகியோர் தலைமையிலான இந்தக் குழு, நிலவின் சிக்கலான தரைப்பரப்பு தகவல்களை கையாள 'ஸ்மார்ட் நியூரல் நெட்வொர்க்குகளை' பயன்படுத்தி, இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் குழு உருவாக்கியுள்ள 'கிரேட்டர்மார்போ' எனும் பிரத்யேகக் கருவியின் மூலம், 200 மீட்டர் வரையிலான மிகச்சிறிய பள்ளங்களைக் கூட துல்லியமாகக் கண்டறிவதோடு, அவற்றின் ஆழம் மற்றும் தரைப்பரப்பின் கரடுமுரடான தன்மை போன்ற விவரங்களையும் அளவிடுகிறது. நிலவின் மேடு பள்ளங்கள் நிறைந்த மேற்பரப்பில், பாதுகாப்பான தரையிறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் விண்வெளி ஆய்வுகளைத் திட்டமிட இது விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan