Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் போட்டிகளில் 3 முக்கிய மாற்றங்கள் - சச்சின் பரிந்துரை

ஐபிஎல் போட்டிகளில் 3 முக்கிய மாற்றங்கள் - சச்சின் பரிந்துரை

31 வைகாசி 2026 ஞாயிறு 17:38 | பார்வைகள் : 132


மும்பையில் கிரிக்இன்போ விருதுகள் (Cricinfo Honours) விழா நடைபெற்றது. இதில், 21ஆம் நூற்றாண்டின் (2000 -2025) மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த துடுப்பாட்ட வீரராக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், சிறந்த ஆல் ரவுண்டராக தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலீஸும், சிறந்த பந்துவீச்சாளராக இலங்கையின் முத்தையா முரளிதரனும், சிறந்த மகளிர் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் 3 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. T 20 போட்டியில் வெறும் 20 ஓவர்கள்தான் விளையாட வேண்டும். அதிலும் கூடுதல் ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கிறோம்.

ஏற்கனவே பந்துவீச்சாளர்கள் கடுமையாக சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள். இது ஒரு காலத்தில் ஆல்ரவுண்டர்கள் என்பவர்கள் உருவாகாமலே போகுமாறு ஆகிவிடும்.

தற்போது முதல் 6 ஓவர் பேட்ஸ்மேன் பவர்ப்ளே உள்ளது. இதில் முதல் 4 ஓவர்கள் பேட்ஸ்மேன் பவர்ப்ளே ஆக தொடரட்டும். ஆனால் மீதமுள்ள 2 ஓவர் பீல்டிங் அணி கேப்டன் ஆட்டத்தில் எப்போது பயன்படுத்தலாம் என்ற வகையில் இருக்க வேண்டும். அப்போது கூடுதலாக ஒரு வீரரை வட்டத்திற்கு வெளியே நிறுத்திக் கொள்ளலாம்.

ஒரு பந்துவீச்சாளரை 5 ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும். பேட்டர்கள் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது, சிறந்த பந்து வீச்சாளர் ஏன் 5 ஓவர்கள் வீசக்கூடாது? என கூறியுள்ளார்.