சாம்பியன்ஸ் லீக் வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: 326 பேர் கைது!!
31 வைகாசி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 1784
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் Paris Saint-Germain (PSG) அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் காரணமாக 326 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் மட்டும் 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Budapest நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றியைப் பதிவு செய்த PSG அணியின் சாதனையை கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பரிஸ் நகரின் முக்கிய வீதிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் திரண்டனர். குறிப்பாக Champs-Elysées பகுதியில் சுமார் 20,000 பேர் ஒன்று கூடியதாக தெரிவிக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் நேரத்தில் பெரியளவிலான அசம்பாவிதங்கள் பதிவாகாதபோதிலும், Parc des Princes மைதானத்தைச் சுற்றிய பகுதிகளில் சில பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதிப் போட்டி நிறைவடைந்த பின்னர் பரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. 8ஆம் வட்டார காவல் நிலையம் மீது சுமார் 100 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியதுடன், நகர வளையச் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு வெதுப்பகம் மற்றும் பேருந்து தரிப்பிடமும் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை Agen, Grenoble மற்றும் Bordeaux உள்ளிட்ட நகரங்களிலும் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan