டாஸ்மாக் மது கொள்முதலில் இனி வெளிப்படைத்தன்மை!
31 வைகாசி 2026 ஞாயிறு 09:20 | பார்வைகள் : 161
மதுபானங்கள் கொள்முதலில் இனி வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க, 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில் நீடித்த கொள்முதல் முறை மாற்றப்பட்டு, ஒரு பெட்டிக்கு 60 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்த, 'கமிஷன்' ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதாவது, பழைய ஆட்சியாளர்களான அ.தி.மு.க., - தி.மு.க., புள்ளிகளுக்கு மாதந்தோறும் சென்ற 51 கோடி ரூபாய் 'கட்டிங்' தொகை மிச்சமாகி உள்ளது.
தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது. இந்நிறுவனம், 11 மதுபான தயாரிப்பு ஆலைகளில் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது.
மாதம் சராசரியாக 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 35 லட்சம் பெட்டி பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. மது கடைகளில் எந்த நிறுவன தயாரிப்பு மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அதற்கு ஏற்ப, அந்த நிறுவனத்திடம் இருந்து மது வகைகளை அதிகம் வாங்கி விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் நடத்தும் முக்கியமான மூன்று மதுபான ஆலைகளில் இருந்து தான் மது வகைகளும், பீர் வகைகளும் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டன.
அதன்படி, ஒரு மாதத்திற்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் மது வகைகளில் சராசரியாக 35 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகளில் 20 லட்சம் பெட்டிகளும் தி.மு.க., ஆதரவு ஆலைகளில் தான் வாங்கப்பட்டன.
இதனால், மது பிரியர்கள் விரும்பாத மது வகைகள் அதிகம் வாங்கப்பட்டதுடன், அவை விற்பனை ஆகாமல், இரு மாதங்களுக்கு மேல் இருப்பு வைக்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ளது. தற்போது, தி.மு.க., ஆதரவு நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்வது குறைக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் ஒரு பெட்டிக்கு 60 ரூபாய் வீதம், 'கமிஷன்' வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல்
ஒரு பெட்டியில், 180 மி.லி., குவார்ட்டர் பாட்டில் என்றால் 48 இருக்கும்; 375 மி.லி., பாட்டில் என்றால் 24 இருக்கும்; 750 மி.லி., பாட்டில் என்றால் 12 இருக்கும்.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை, அவரது தோழி சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத்தின் மதுபான ஆலையில் இருந்து தான், மது வகைகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டன.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்த நிலையில், அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்குவது குறைக்கப்பட்டது. கடந்த 2017க்கு பின், அதாவது அ.தி.மு.க., ஆட்சியிலும், கடந்த தி.மு.க., ஆட்சியிலும், தி.மு.க., ஆதரவு நிறுவனங்களில் இருந்து தான், 60 - 70 சதவீதம் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது, சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவில் மது வகைகள், பீர் வகைகள் வாங்குவது நிறுத்தப்பட்டு, பாரபட்சமின்றி எந்த நிறுவனத்தின் மது வகைகளுக்கு தேவை அதிகம் இருக்கிறது என்பதை கணக்கெடுத்து, அதற்கு ஏற்ப கொள்முதல் செய்யும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.
மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள், ஒரு பெட்டிக்கு, ஆட்சியின் உயர்மட்டத்திற்கு 50 ரூபாய், துறையின் உயர்மட்டத்திற்கு 10 ரூபாய் என, மொத்தம் 60 ரூபாயை கமிஷனாக வழங்கி வருகின்றன. இதன் வாயிலாக ஒரு மாதம், 51 கோடி ரூபாய் 'கட்டிங்' கிடைக்கும்.
இந்த நடைமுறை, கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது, பெட்டிக்கு ஆலைகள் தரப்பினரிடம் இருந்து கமிஷன் வாங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan