ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக வரும் இந்திய கப்பல்கள்!
31 வைகாசி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 214
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'மூன்று நாடுகளும் அமைதி ஒப்பந்தத்திற்கு தயாராக உள்ளது' என்று செய்திகள் வந்தாலும், எப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த போரால், ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பெட்ரோலிய பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்தியாவில் இதன் பாதிப்பு கடுமையாக உள்ளது. சமீபத்தில் பலமுறை பெட்ரோல், டீசல், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டுள்ளது.
'பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை' என, மத்திய அரசு கூறி வந்தாலும், வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியா வருவது, பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் வந்தால் தாக்குவோம்' என, ஈரான் அறிவித்து தாக்குதலும் நடத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் இந்த பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்தியாவிற்கு பெருமளவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகின்றன. தற்போது, 10க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் கச்சா என்ணெய், காஸ் ஏற்றி அங்கு காத்துக் கிடக்கின்றன.
சில கப்பல்கள் இந்த வழியாக இந்தியாவிற்கு வந்துவிட்டன; மற்றவை வந்து கொண்டிருக்கின்றன. 'பாதுகாப்பில்லாத ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் எப்படி வருகின்றன' என்று கேட்டால், 'இது ரகசியம்; வெளியே சொல்ல முடியாது' என, அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் அரசிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், மத்திய கப்பல் துறை அமைச்சகம், 'வார் ரூம்' ஒன்றை அமைத்துள்ளது. இந்திய கடற்படையின் ஒருங்கிணைப்புடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வரும் கப்பல்களின் நடவடிக்கைகளை, 24 மணி நேரமும் இந்த வார் ரூம் கண்காணித்து வருகிறது. அத்துடன், தாக்குதலை தவிர்க்க எந்த வழியில் வர வேண்டும் என, கப்பல் கேப்டன்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan