ஜூன் 3ல் 100 % எத்தனாலில் இயங்கும் இந்தியாவின் முதல் பைக் அறிமுகம்
30 வைகாசி 2026 சனி 09:24 | பார்வைகள் : 166
எத்தனாலில் இயங்கும் இந்தியாவின் முதல் பைக்கை வரும் ஜூன் 3ம் தேதி ஹீரோ மோட்டார் நிறுவனம் அறிமுக செய்ய உள்ளது.
மேற்காசிய போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, மாற்று எரிபொருட்களில் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நம் நாட்டில், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக ஹீரோ மோட்டோ நிறுவனம் தனது முதல் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் பைக்கை வரும் ஜூன் 3ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. டில்லியில் நடக்கும் இந்த அறிமுக விழாவில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துக் கொள்கின்றனர்.
100% எத்தனாலில் இயங்கக்கூடியதாக இருப்பினும், இத்தகைய வாகனங்களை 'பிளக்ஸ்-பியுல் வாகனங்கள்' என அழைக்கின்றனர். இதற்கு காரணம், இந்த வாகனங்கள் தேவைக்கேற்ப எத்தனால் அல்லது பெட்ரோலில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. வரவிருக்கும் மாடலின் பெயரை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
இந்தியாவில் ப்ளெக்ஸ்-ப்யூயல் வாகனங்களை விரைவாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சிக்குத் தங்கள் நிறுவனம் ஆதரவளிக்கும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷவர்தன் சிட்டாலே உறுதி அளித்தார்.
இந்த பைக் அறிமுக செய்த பிறகு, சிறப்பு பிரத்யேக வசதிகள் குறித்து விவரங்கள் வெளியாகும். இப்பொழுதே இருந்தே எத்தனால் இயங்கும் பைக் குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருவதால், மிகுந்த வரவேற்பை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜூன் 5ம் தேதி 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் Flex - Fuel காரை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அன்றைய தினம் டில்லியில் நடக்கும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் தான் அறிமுகம் ஆகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
இந்த கார்களில் உள்ள பிரத்யேக இன்ஜின்கள் 100% எத்தனால் அல்லது பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த பெட்ரோல் ஆகியவற்றில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால் குறைவான கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது. எத்தனாலின் விலை பெட்ரோலை விட மிகவும் குறைவு; இதனால் பயணச் செலவும் பெருமளவில் குறையும் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan