காலியாகும் மம்தா பானர்ஜி கூடாரம்; அடுத்தடுத்து விலகும் தலைகள்!
30 வைகாசி 2026 சனி 07:17 | பார்வைகள் : 183
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்வியால், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., தலைவர்கள் அடுத்தடுத்து பதவி விலகும் நிலையில், முஸ்லிம்களுக்காக மட்டுமே கட்சி செயல்படுவதாகக் கூறி, கட்சியில் இருந்து, திரிணமுல் காங்., கட்சியின் அசாம் மாநில தலைவர் அபிஜித் மஜும்தார் விலகி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 294 தொகுதிகளில், 208ல் வென்று ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., முதன்முறையாக கைப்பற்றியது. தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார்.
ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., 80 தொகுதிகளை மட்டுமே வென்றது. சொந்த தொகுதியான பவானிபூரிலேயே அவர் தோற்றது, கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
தேர்தல் தோல்வியால், உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற்ற, 100க்கும் மேற்பட்ட திரிணமுல் காங்., கவுன்சிலர்கள் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், திரிணமுல் காங்., நிர்வாகிகளும் கட்சி பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
திரிணமுல் காங்., முன்னாள் எம்.பி., சாந்தனு சென், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அந்த வகையில், திரிணமுல் காங்., கட்சியின் அசாம் மாநில தலைவர் அபிஜித் மஜும்தார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக, மம்தா பானர்ஜிக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், 'அசாம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் முஸ்லிம் சமூகத்திற்காக மட்டுமே செயல்படும் ஒரு அமைப்பாக திரிணமுல் காங்., மாறி விட்டது. இது போன்ற அரசியல் சூழலில் என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிணமுல் காங்., நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால், என்ன செய்வதென தெரியாமல் மம்தா பானர்ஜி விழிபிதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan