Paristamil Navigation Paristamil advert login

பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மறுதாக்குதல்

பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மறுதாக்குதல்

28 வைகாசி 2026 வியாழன் 16:01 | பார்வைகள் : 986


இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்த ஒப்பத்தங்கள் மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா ஈரான் மீது திடீர் தாக்குதலை  மேற்கொண்டது.

ஹோர்முஸ் நீரிணையின் அருகில் பந்தர் அப்பாஸ் நகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மறுதாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்க இராணுவ விமான தளம் ஒன்றை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்கா மீண்டும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் இதை விட மோசமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.