Paristamil Navigation Paristamil advert login

மட்டக்களப்பில் அதிர்ச்சி - விடுதி ஒன்றில் தீ விபத்து - இரண்டு சிறுவர்கள் பலி

மட்டக்களப்பில் அதிர்ச்சி - விடுதி ஒன்றில் தீ விபத்து - இரண்டு சிறுவர்கள் பலி

27 வைகாசி 2026 புதன் 16:38 | பார்வைகள் : 1016


மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

இன்று (27) பிற்பகல் அளவில் குறித்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் அதில் வௌியான நச்சுப் புகையினால் விடுதியின் அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலையில் குறித்த பிள்ளைகளின் தயார் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் தாயை பார்வையிடுவதற்காக தமது தந்தையுடன் பதுளையில் இருந்து குறித்த இரண்டு பிள்ளைகளும் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது அந்த அறையில் இரண்டு பிள்ளைகளும் தங்கியிருக்க தந்தை வௌியில் சென்றுள்ள சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 3 வயதுடைய ஆண் பிள்ளையும், 5 வயதுடைய பெண் பிள்ளையுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.