இங்கிலாந்தில் வெப்பத்தின் உச்சம் - இரு சிறுவர்கள் உயிரிழப்பு!
26 வைகாசி 2026 செவ்வாய் 22:03 | பார்வைகள் : 993
இங்கிலாந்தில் வங்கி விடுமுறை 25.05.2026 ஆம் திகதி பதிவான வரலாறு காணாத வெப்பத்தின் போது, நீரில் மூழ்கிய விபத்துக்கள் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் இங்கிலாந்தில் பதின்ம வயதினர் இருவர் உயிரிழந்தனர்.
அதன்படி, ஹாலிஃபாக்ஸ் (Halifax) அருகே நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் சில மணிநேரங்களுக்குப் பின்னர், வார்விக்ஷயரில் (Warwickshire) உள்ள ஒரு நீர் பூங்காவில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் ஹாலிஃபாக்ஸ் மற்றும் வார்விக்ஷயர் காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தெற்கு லண்டனில் உள்ள கியூவில் (Kew ) நேற்று வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸை எட்டியதன் மூலம், மே மாதத்தின் மிக வெப்பமான நாள் பதிவானது.
இந்நிலையில் வெப்ப அலையை தாங்கேலாத ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரைகள், நீர் பூங்காக்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan