இந்தியா- நியூசி., ஒப்பந்தம்: 27ல் கையெழுத்து
23 சித்திரை 2026 வியாழன் 12:40 | பார்வைகள் : 376
இந்தியா- நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் 27ம் தேதி( திங்கட்கிழமை) கையெழுத்து ஆகிறது.
இந்தியா நியூசிலாந்து இடையே கடந்த ஆண்டு டிச.,22ம் தேதி வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அனைத்து வகையான இந்திய பொருட்களுக்கும் நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப்படுகிறது.
நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்துண்டுகள், வைன், அவகோடா,புளூபெர்ரி பழங்கள் உள்ளிட்ட 95 சதவீத பொருட்களுக்கு நம் நாட்டில் வரி குறைக்கப்படும். அல்லது பூஜ்ஜியம் ஆக்கப்படும். பால் மற்றும் பால் பொருட்களுக்கு வரிச்சலுகை கிடையாது. இந்திய மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 5 ஆயிரம் நியூசிலாந்து விசா வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் திங்கட்கிழமை கையெழுத்து ஆக உள்ளது.
இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உடன் தடையறற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அறிவித்தோம். இது முடியாது என தெரிவித்தனர். வரும் திங்கட்கிழமை அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட உள்ளோம். 140 கோடி நுகர்வோர் கொண்ட சந்தையை நமது நியூசிலாந்து ஏற்றுமதியாளர்கள் பெற முடியும். நமது வேலைவாய்ப்புகளில் நான்கில் ஒன்று வர்த்தகத்துடன் இணைந்துள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் நமது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக்களே கூறுகையில்,
நியூசிலாந்தை சேர்ந்த ஏற்றுமதியாளர்களுடன் இந்தியா சென்று கையெழுத்து போட உள்ளேன். நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் சிறந்த பொருட்களை, அதிகளவு விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுததும். கிவி பழங்கள், கடல் உணவுகள், இறைச்சி, தேன் என நாடு முழுதும் உள்ள பல்வேறு பொருட்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan