Paristamil Navigation Paristamil advert login

லெபனான் தாக்குதல்: காயமடைந்த மேலும் ஒரு பிரெஞ்சு படைவீரர் உயிரிழப்பு!!

லெபனான் தாக்குதல்: காயமடைந்த மேலும் ஒரு பிரெஞ்சு படைவீரர் உயிரிழப்பு!!

22 சித்திரை 2026 புதன் 16:01 | பார்வைகள் : 391


லெபனானில் நடைபெற்ற தாக்குதலில் கடுமையாக காயமடைந்திருந்த பிரெஞ்சு படைவீரர் அனிசெட் ஜிரார்டின் (Anicet Girardin) இன்று உயிரிழந்ததாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். இவர் திங்கள்கிழமை லெபனானிலிருந்து அவசரமாக பிரான்சுக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.

ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலில் இவர் கடுமையாக காயமடைந்திருந்தார். இதே தாக்குதலில் ஏற்கனவே பிரெஞ்சு படைவீரர் ஃப்ளோரியன் மொன்டோரியோ (Florian Montorio) உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ 132வது படைப்பிரிவைச் சேர்ந்த அனிசெட் ஜிரார்டின், லெபனானில் ஏற்பட்ட காயங்களால் இன்று காலை உயிரிழந்தார். அவர் பிரான்சிற்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார்,” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், “இதே தாக்குதலில் உயிரிழந்த ஃப்ளோரியன் மொன்டோரியோவிற்கு நாளை 23ம் திகதி மரியாதை செலுத்தும் நிலையில், அனிசெட் ஜிரார்டின் அவர்களின் தியாகத்தையும் நாடு ஆழ்ந்த உணர்வுடன் நினைவுகூர்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் காயமடைந்த மற்ற படைவீரர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்,” எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.