Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்–லெபனான் - எமானுவல் மக்ரோனின் அழைப்பு

இஸ்ரேல்–லெபனான் - எமானுவல் மக்ரோனின் அழைப்பு

21 சித்திரை 2026 செவ்வாய் 19:53 | பார்வைகள் : 262


லெபனான் பிரதமருடன் ஜனாதிபதி மாளிகையில்(Élysée)  நடத்திய கூட்டு அறிக்கையில், பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எம்மானுவல் மக்ரோன் வெளியிட்ட அரசியல் நிலைப்பாடுகள்.

இஸ்ரேல்

இஸ்ரேல், லெபனான் நிலப்பரப்பிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்,

மேலும் “தன் நிலப்பரப்பு குறித்த நோக்கங்களை கைவிட வேண்டும்”

என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டை  பாதுகாக்கும் நோக்கில் கூறப்பட்டது.

ஹிஸ்புல்லா குறித்து மக்ரோனின் நிலைப்பாடு

ஹிஸ்புல்லாவின் ஆயுதங்கள் களையப்படல் வேண்டும்.

ஆனால் அது லெபனானால் செய்யப்பட வேண்டிய செயல்முறை

என்றும், அதாவது,

லெபனானின் அரசு அதிகாரம் மற்றும் இறையாண்மை வலுவடைய வேண்டும்.  ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாடு லெபனான் அரசின் பொறுப்பு

என்பதை பிரான்ஸ் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அமைதிக்கான ஒரே பாதை : அரசியல் ஒப்பந்தம்

“அமைதிக்கான ஒரே வழி, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான அரசியல் ஒப்பந்தமே.”

இந்த ஒப்பந்தம்:

இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்,

லெபனானின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை முழுமையாக மதிக்க வேண்டும்,

எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் நீடித்த தீர்வை வழங்க வேண்டும்.

எனவும் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.