குற்றவாளிகளுக்கு திமுக அடைக்கலம்: அண்ணாமலை
22 சித்திரை 2026 புதன் 06:12 | பார்வைகள் : 284
திமுக கிரிமினல்களுக்கு அடைக்கலாம் கொடுத்து பொறுப்பு கொடுத்து, அவர்களை போலீசால் பிடிக்க முடியாது. யாராலும் தொட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. குற்றவாளிகளை மறைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் இதனை செய்தியாக்கக்கூடாது என போலீசார் அக்கறை எடுத்து செயல்படுகின்றனர். நமது பிரசாரம் முடியும் நாளில் நடந்துள்ள திருவண்ணாமலை சம்பவம் ஒரு சாட்சி. ஒரு குடும்பம்,ஒரு கட்சி,ஒரு ஆட்சி,அரசு இயந்திரம் நான்கும் பின்னி பிணைந்துள்ளது. நான்கிற்குள் எந்த வேறுபாடும் கிடையாது.யாரும் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு 5 ஆண்டுகள் குற்றச்சம்பவம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தவறான நபர்களுக்கு அரசியல் அடைக்கலம் கொடுக்கப்படுகிறது. இபிஎஸ் ஆட்சியில் இது நடக்காது என நம்புகின்றனர்.
திமுக ஒரு கட்சியாக கிரிமினல்களுக்கு அடைக்கலாம் கொடுத்து பொறுப்பு கொடுத்து, அவர்களை போலீசால் பிடிக்க முடியாது. யாராலும் தொட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து இயந்திரங்களும் தனித்தனியாக இயங்க வேண்டும். ஒன்று இன்னொன்றை கட்டுப்படுத்த முடியாது. கட்சி வேறு, அரசு வேறு. அரசு இயந்திரம் வேறு.யாராவது அரசியல்வாதி குடும்பங்கள் வேறு. மக்கள் யோசித்து மாற்றத்திற்கு ஓட்டுப்போடும் போதுதிமுக கூட்டணி அரசு வேண்டாம். தேஜ கூட்டணி அரசு வேண்டும் என மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என நம்புகிறோம்.
திமுக அரசின் ஊழல்களுக்கு பொறுப்புஏற்க மாட்டோர் கம்யூனிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.பிரேமலதா சேலம் மாநாட்டில் பேசும்போது, அண்ணன் நல்லவர்தான், சட்டம் ஒழுங்கு சரியில்லை கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது என்கிறார்.கமல் தனிக்கட்சி துவங்கும்போது செந்தில்பாலாஜியை விமர்சித்துபேசினார். இன்று கோவையில் பிரசாரம் செய்கிறார். இதனை மக்கள் பார்க்கின்றனர். சந்தர்ப்பவாத கூட்டணி எது.சந்தர்பவாதத்திற்கு யார் யாரோடு சேர்ந்திருக்கிறார்கள்..
தமிழக காங்கிரஸ் தலைவர் பட்டப்பகலில் பொய் சொல்லி மட்டும் அளவுக்கு நிலை உள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர் பொய்யான பத்திரிகையாளர் சந்திப்பு அம்பலப்பட்டு நிற்கிறார்.கூட்டணியில் அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. ஸ்டாலின் என்ற பெயரை சொல்ல ராகுல் கூச்சப்படுகிறார். 3வது பிரசார கூட்டத்தில் கடைசியில் பெயரை சொல்கிறார். ஸ்டாலின் பெயரை சொல்ல 5 மணி நேரம் ஆகியது.
கோவை தெற்கு தொகுதியில் கரூரில் இருந்து வந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்தனர். அவர்களை ராமநாதபுரம் டி1 போலீஸ் ஸ்டேசனில் வைத்த போது 500 பேர் சிறைபிடித்தனர். இதனால், போலீசார் பூட்டு போட்டு சிறைபிடித்தனர். அவர்களின் அராஜகத்தை பார்த்தோம்.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்த போது, அதிமுக பாஜ தொண்டர்கள் தாக்கப்பட்டனர். தமிழகத்தில் சரித்திர வெற்றி தேஜ கூட்டணிக்கு கிடைக்கும். இது பிரசாரத்தின் போது தெளிவாக தெரிந்துள்ளது. செந்தில்பாலாஜி அரசு வேலை,அரசு பணத்தில் இருந்துள்ளார் . 471 நாள் சிறையில் இருந்தபோது அரசு பணத்தை கொடுத்துள்ளது. நான் எந்த அரசு பணியில் இல்லை. அரசு பணத்தில் இல்லை. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் என கூறியதும் அண்ணாமலை1 லட்சம் கோடி வைத்துள்ளார் என திமுக கூறுகிறது.கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளீர்களா இல்லையா 200 கோடி செலவு செய்தீர்களா இல்லையா இதற்கு பதில் சொல்ல வேண்டும் செந்தில்பாலாஜி மீது பல வழக்கு உள்ளது. இந்தியாவில் பட்டியல் ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜி முதலிடத்தில் உள்ளார்.
அவர் பத்திரிகையாளரை பார்த்ததும் பணம் கொடுக்கவில்லை என்கிறார். சரித்திர தோல்வி கொடுத்தாலும் திருந்த மாட்டார் என்பது மக்களுக்கு தெரியும். அவர் ஜாமினில் உள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் சிறை செல்வார் என்பது மக்களுக்கு தெரியும்.பணம் வாங்குவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம். தங்களுக்கு பணம் வரவில்லை என மக்கள் மறியல் போராட்டம் நடந்ததும் தமிழகத்தில் நடந்தது. தேர்தல் கமிஷன் திறமையாக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தேர்தல் நடத்துவதற்கு 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்தால் தான் திமுகவின் அராஜகத்தை நிறுத்த முடியும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan