பயங்கரவாத தாக்குதலை முறியடித்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு!!
21 சித்திரை 2026 செவ்வாய் 17:37 | பார்வைகள் : 434
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 2015 நவம்பர் 13ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது Bataclan அரங்கில் சிறப்பாக செயல்பட்ட பாதுகாப்பு படையினருக்கும், தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுக்கும் ஏப்ரல் 21ம் திகதி Elysée மாளிகையில் "Légion d'honneur" விருதுகளை வழங்கினார். “இன்று நாம் உயிரைக் காக்கத் துணிந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்” என அவர் உரையாற்றினார்.
அந்த இரவு பயங்கரம் பரவிய சூழலில், அச்சத்தை மீறி மக்களை காப்பாற்றவும் பாதுகாக்கவும் துணிந்த பெண்களும் ஆண்களும் பிரான்சின் உறுதியை நிலைநிறுத்தியதாக அவர் பாராட்டினார். மொத்தம் 61 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டதில், காவல் துறையினர், சிறப்பு தாக்குதல் பிரிவுகள் மற்றும் பரிஸ் தீயணைப்பு படையினரும் அடங்குகின்றனர்.
மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கங்களான "Life for Paris" மற்றும் "13onze15" ஆகியவற்றின் தலைவர்களும் இந்த கௌரவத்தை பெற்றுள்ளனர். விழாவில் தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் மற்றும் குடும்பத்தினரால் பாடப்பட்ட “Shooting Stars” இசையுடன் அனைவரும் வரவேற்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி François Hollande உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதேவேளை, பயங்கரவாத தாக்குதலின்போது முதலில் அரங்கிற்குள் நுழைந்த சில காவல்துறை அதிகாரிகள் பட்டியலில் இடம்பெறாதது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan