ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!
21 சித்திரை 2026 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 1334
நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே தியேட்டர் ஹிட் கிடைக்கவில்லை. அவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம், சூரரை போற்று இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் அந்த இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியானது. இன்னும் சொல்லப்போனால் சிங்கம் 2 படத்திற்கு பின் ஒரு பெரிய தியேட்டர் ஹிட் சூர்யாவுக்கு இதுவரை கிடிக்கவில்லை.. அவரும் போராடி பார்க்கிறார்.. ஆனால் எதுவும் நடக்கவில்லை..
அதேநேரம் தற்போது சூர்யா நடித்துள்ள மற்றும் நடுத்து வரும் திரைப்படங்கள் கண்டிப்பாக தியேட்டரில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் கமர்சியல் ரீதியாக படம் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மே 14ம் தேதி வெளியாகவுள்ளது. ஒருபக்கம் சூர்யாவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் இயக்குனர் தா.செ.ஞானவேல். சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கியவர். அதன்பின் ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கினார்.. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை..
வேட்டையன் படத்திற்கு பின் எந்த படத்தையும் ஞானவேல் இயக்கவில்லை. சரவணா ஹோட்டல் அதிபர் - ஜீவஜோதி தொடர்பான ஒரு வெப்சீரியஸை இயக்க திட்டமிட்டார். ஆனால், அதுவும் டேக் ஆப் ஆகவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அவரை அழைத்த சூர்யா ‘நீங்கள் ஏன் மற்ற நடிகர்ள் பின்னாடி அலைகிறீர்கள்? நாம் மீண்டும் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என்று கூறியிருக்கிறாராம். இந்த படத்தை சூர்யாவின் ழகரம் பவுண்டேஷன் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan