கொள்ளைக்கார கூட்டத்தை விரட்டி அடியுங்கள்; திமுகவை விளாசிய அன்புமணி
21 சித்திரை 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 1220
பணத்தை கொள்ளையடித்து வைத்திருக்கும் கொள்ளைக்கார கூட்டத்தை விரட்டி அடியுங்கள். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சேலம் ஜலகண்டபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது; திமுகவில் ஒன்றை ஒன்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஓட்டுக்கு ரூ.2,000 கொடுக்கிறார்கள். தமிழகத்தில் 5 கோடியே 75 லட்சம் ஓட்டு உள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ.2000 என்றால் ரூ.12,000 கோடி தேவை. ரூ.8,000 கோடி திமுகவின் தேர்தல் செலவு.
மொத்தம் 20 ஆயிரம் கோடி ரூபாய் இந்த தேர்தலுக்கு திமுக செலவு செய்கிறது. அப்பொழுது எவ்வளவு கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். பணத்தை கொள்ளையடித்து வைத்திருக்கும் கொள்ளைக்கார கூட்டத்தை விரட்டி அடியுங்கள். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அவர்கள் ஆட்சி தகுதி இல்லாதவர்கள்.
நேர்மையற்றவர்கள்,திறமையற்றவர்கள். நாணயமற்றவர்கள். இப்படி ஒரு ஆட்சியே வேண்டாம். திமுக ஆட்சி தோல்வி அடைந்து விட்டது. இபிஎஸ்ஐ முதல்வர் ஆக்குங்கள். இந்த எடப்பாடி சட்டசபை தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை வெற்றி பெற்று ஆக வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan