அதிக சொத்து கொண்ட டாப் 10 வேட்பாளர்கள் பட்டியல்
20 சித்திரை 2026 திங்கள் 14:56 | பார்வைகள் : 236
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து கொண்ட டாப் 10 வேட்பாளர்கள் பட்டியலை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பானது
தேசிய கட்சிகளில்
184 பேரது வேட்புமனுக்கள், மாநில கட்சிகள் 637 பேர்,
பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் 979 மற்றும்
2192 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழக வேட்பாளர்களில் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர்?
திமுக - 170 பேர்
அதிமுக 160 பேர்
தவெக - 156 பேர்
காங்கிரஸ் - 27 பேர்
அதிக சொத்து உள்ள டாப் 10 வேட்பாளர்கள்
1.லீமா ரோஸ் மார்ட்டின் (அதிமுக)
லால்குடி தொகுதி
சொத்து மதிப்பு ரூ.5863 கோடி
2.ஜோசப் விஜய் (தவெக)
பெரம்பூர், திருச்சி கிழக்கு
சொத்து மதிப்பு ரூ.648 கோடி
3.ஆதவ் அர்ஜூனா (தவெக)
வில்லிவாக்கம்
சொத்து மதிப்பு ரூ.534 கோடி
4.இசக்கி சுப்பையா (அதிமுக)
அம்பாசமுத்திரம்
சொத்து மதிப்பு ரூ.419 கோடி
5.கார்த்திக் மோகன் (திமுக)
வில்லிவாக்கம் தொகுதி
சொத்து மதிப்பு ரூ.346 கோடி
6.மதியழகன் (திமுக)
பர்கூர் தொகுதி
சொத்து மதிப்பு ரூ.304 கோடி
7.ராஜேந்திரன் (திமுக)
திருவள்ளூர் தொகுதி
சொத்து மதிப்பு ரூ.259 கோடி
8.கே.ஆர்.ஜெயராம் (அதிமுக)
சிங்காநல்லுார் தொகுதி
சொத்து மதிப்பு ரூ.172 கோடி
9.நித்யானந்தன் (கொமதேக)
பொள்ளாச்சி தொகுதி
சொத்து மதிப்பு ரூ.170 கோடி
10.ஆர்.எஸ்.முருகன் (தவெக)
திருநெல்வேலி தொகுதி
சொத்து மதிப்பு ரூ.158 கோடி
ரூ.5 கோடி
ரூ.10 லட்சத்துக்கும் கீழ் சொத்து வைத்துள்ளவர்கள் -1371
ரூ.10 முதல் 50 லட்சம் வரை -1204
ரூ.50 லட்சம் முதல் 2 கோடி வரை -716 பேர்
ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை 286 பேர்
ரூ.5 கோடிக்கு மேல் 415
கோடீஸ்வரர்கள்
தேசிய கட்சிகளின் சார்பில் - 61
மாநில கட்சிகள் -435
பதிவு செய்யப்பட்ட கட்சி- 304
சுயேச்சை- 181 பேர் கோடீஸ்வரர்கள்
கிரிமினல் வழக்கை அறிவித்தவர்கள்
தேசிய கட்சிகள் - 34
மாநில கட்சிகள் - 268
பதிவு செய்யப்பட்ட கட்சி -258
சுயேச்சைகள் -162 பேர் கிரிமினல் வழக்கு உள்ளது என அறிவித்துள்ளனர்.
தீவிர கிரிமினல் வழக்கு உள்ளவர்களில்
தேசிய கட்சியில் - 14
மாநிலகட்சி 138
பதிவு செய்யப்பட்ட கட்சி -148
சுயேச்சைகள் -103 பேர்
தங்கள் மீது தீவிர வழக்குகள் உள்ளன என அறிவித்துள்ளனர்.
கட்சி வாரியாக குற்ற வழக்கு உள்ளவர்கள்
அதிமுக - 118
தவெக -92
திமுக - 70
பாஜ -16
காங்கிரஸ் -14
பாமக -9
தேமுதிக - 5
இந்திய கம்யூனிஸ்ட் -3
மார்க்சிஸ்ட் - 4 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என அறிவித்துள்ளனர்.
மிக தீவிரமான குற்றவழக்குகள்
அதிமுக -60
தவெக 43
திமுக -32
பாஜ-9
காங்கிரஸ் 5
பாமக 6
தேமுதிக 1
இந்திய கம்யூனிஸ்ட் -1 பேர் தங்கள் மீது தீவிரமான குற்றவழக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளனர்.
கல்வித்தகுதி
பட்டப்படிப்பு - 1822 பேர்
டிப்ளமோ முடித்தவர்கள் -301
படிக்காதவர்கள் - 95 பேர்
7 பேர் கல்வி தகுதி குறித்து தகவல் கொடுக்கவில்லை.
பெண் வேட்பாளர்கள்
சட்டசபை தேர்தலில் 442 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
சுயேச்சை - 149
நாதக -117
தவெக- 24
அதிமுக-21
திமுக -19
பகுஜன் சமாஜ் கட்சி -15
சசிகலா கட்சி -14
தவாக-12
பாஜ-6
புதிய தமிழகம்-5
பாமக -3
காங்கிரஸ், விசிக சார்பில் தலா -2
தேமுதிக -1 களமிறங்கி உள்ளனர்.
வயது முதிர்ந்த வேட்பாளர்
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் வயது முதிர்ந்தவர், 87 வயதான அமைச்சர் துரைமுருகன்.
அடுத்தடுத்த இடங்களில் நாகர்கோவில் பாஜ வேட்பாளர் காந்தி, 81, ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் அமைச்சர் காந்தி, 80 ஆகியோர் உள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ஜூனன்
சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம்
சசிகலா கட்சி சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் ஹரி கிருஷ்ணன்
புதிய தமிழகம் கட்சி சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமி
தவெக சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் அருண்குமார்
தவெக சார்பில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் பரணி பாலாஜி உள்ளிட்ட 31 வேட்பாளர்களின்
வேட்புமனுக்கள் தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாதது அல்லது சரியாக ஸ்கேன் செய்யப்படாத காரணத்தினால் ஆய்வு செய்ய முடியவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan