Paristamil Navigation Paristamil advert login

மலேசியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 வீடுகளுக்கு சேதம்

மலேசியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 வீடுகளுக்கு சேதம்

19 சித்திரை 2026 ஞாயிறு 15:23 | பார்வைகள் : 1517


மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளன.

அந்நாட்டு அரச செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இன்று (19) அதிகாலை 01:32 மணியளவில் இந்தத் தீ பரவியுள்ளது.

குறித்த பகுதியில் அதிகளவிலான மரத்தாலான வீடுகள் காணப்பட்டமையும், பலத்த காற்று வீசியமையும் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடியுரிமை இல்லாதவர்கள் மற்றும் பழங்குடியினக் குழுக்கள் உள்ளிட்ட நாட்டின் ஏழ்மையான சமூகங்களே இப்பகுதியில் வசித்து வந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதற்கும், தற்காலிகமாக அவர்களை மீள் குடியேற்றுவதற்கும் மத்திய அரசாங்கம் சபா அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீ விபத்தினால் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.