தள்ளிப்போகும் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கு- அச்சத்தில் இருக்கிறதா ஈரான் அரசு?
19 சித்திரை 2026 ஞாயிறு 14:00 | பார்வைகள் : 289
பாதுகாப்பு காரணங்களால் உயிரிழந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவம் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை முறையான இறுதிச் சடங்கு செய்யாமல் ஈரான் அரசு இருந்து வருகிறது.
வெளியான தகவல்களின் படி, தலைவர் மறைவின் போது நடத்தப்படும் பிரம்மாண்ட இரங்கல் ஊர்வலத்தை நடத்த முடியாமல் தெஹ்ரான் அரசு மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
காமெனிக்கு முன்பாக 1989ம் ஆண்டு இருந்த தலைவரான ருஹொல்லா கொமேனி மறைந்த போது லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு படை தலைவர் அலி லாரிஜோனி போன்ற முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதால் ஈரான் தரப்பு சற்று பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரானிய அரசின் இந்த தயக்கம் தற்போதைய ஆட்சியின் பலவீனத்தை காட்டுவதாக ஜனநாயக பாதுகாப்பிற்கான அறக்கட்டளை மூத்த ஆய்வாளர் பெஹ்னாம் தலேப்லு கருத்து தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan