அக்பரும், பீர்பாலும் - அபசகுனம்
4 மாசி 2023 சனி 14:15 | பார்வைகள் : 8348
அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார்.
ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார்.
அன்று முழுவதும் அக்பருக்கு பல பிரச்சனைகள் வ்ந்தது.
எல்லாம் அந்த சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த சிப்பாயை தூக்கில் போட உத்தரவிட்டார்.
இந்த விடயம் பீர்பாலுக்கு தெரிய வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.
அதற்கு அக்பர் இவனுடைய முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது,
இவனுடைய முகம் அபசகுனமானது என்று கூறினார்.
அதற்கு பீர்பால் பயங்கரமாக சிரித்தார்.
“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக பீர்பாலை பார்த்து அக்பர் கேட்டார்.
அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது.
ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார்.
அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த சிப்பாயை விடுதலை செய்தார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan