லெபனானில் காயமடைந்த பிரெஞ்சுவீரர்கள் இருவரின் நிலைமை கவலைக்கிடம்!
19 சித்திரை 2026 ஞாயிறு 10:34 | பார்வைகள் : 948
லெபனானின் தெற்கில் FINUL அமைதிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்டதாக்குதலில் பிரெஞ்சு படைவீரர்கள் காயமடைந்த நிலைமை குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் புது அறிக்கை வெளியடப்பட்டுள்ளது.
லெபனானில் சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில்:
சார்ஜெண்ட் அதிகாரி மொந்தோரியொ உயிரிழந்தார்
மூன்று பிரெஞ்சுவீரர்கள் காயமடைந்தனர்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி:
காயமடைந்த மூவரில் இருவரின் நிலைமை ஆபத்தான நிலையில், கவலைக்கிடமாக உள்ளதாகவும், மூன்றாவது படைவீரர் நிலையான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர்:
தாக்குதலை “மிகவும் கடுமையாகக் கண்டித்தார்”
காயமடைந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு மற்றும் FINUL படையினருக்கு, பிரான்ஸ் அரசின் முழு ஆதரவை தெரிவித்தார்.பொறுப்பாளர்களை நீதிக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan