Paristamil Navigation Paristamil advert login

வடகொரிய தூதருடன் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி பேச்சுவார்த்தை

வடகொரிய தூதருடன் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி பேச்சுவார்த்தை

19 சித்திரை 2026 ஞாயிறு 06:55 | பார்வைகள் : 345


ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் அதிகாரி ஒருவர், வடகொரிய தூதருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு, விளாடிமிர் சால்டோ (Vladimir Saldo) என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சனின் தலைவரான விளாடிமிர் சால்டோ, வடகொரிய தூதர் ஷின் ஹாங் சோல் உடன் சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பில் விவசாயம் மற்றும் பிற துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தென் கொரியாவின் Korea JoongAng Daily செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பின் புகைப்படங்களை சால்டோ வெளியிட்டார். அத்துடன் விவசாயம் மற்றும் மனிதாபிமான முயற்சிகள், அத்துடன் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் கல்வி ஆகியவற்றில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வடகொரியாவின் உணவுப் பொருட்களுக்கான தேவை, ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தின் முன்மொழிவுகளுடன் ஒத்துப்போவதாக அவர் கூறினார்.

உள்ளூர் பண்ணைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காக கெர்சன் பகுதிக்கு வருகை தருமாறு, சால்டோ வடகொரிய தூதருக்கு அழைப்பும் விடுத்தார்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்