Paristamil Navigation Paristamil advert login

கவிழும் கவுண்டம்பாளையம்: ஆடியோவால் சலசலப்பு

கவிழும் கவுண்டம்பாளையம்: ஆடியோவால் சலசலப்பு

19 சித்திரை 2026 ஞாயிறு 09:52 | பார்வைகள் : 580


கோவையில் தி.மு.க., கூட்டணியில் கவுண்டம்பாளையத்தில் காங்.,வேட்பாளர் சூரியபிரகாஷ் போட்டியிடுகிறார். பிரசாரத்துக்கு தி.மு.க.,வினரே செலவிட வேண்டியிருக்கிறது. காங்., வேட்பாளர் ஜெயிக்க நாம் ஏன் செலவிட வேண்டும் என தி.மு.க.,வினர் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோ, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த ஆடியோவில் இருப்பது இதுதான்:

என்னன்னா... ஊருக்குள்ள காங்கிரஸ் வேட்பாளர் கேன்வாஸ்க்கு வர்றாரு. எந்த செய்தியும் இல்லை; தகவலும் இல்லை. தனி மரம் தோப்பாகுமா. மாவட்ட செயலரும், ஒன்றிய செயலரும் என்ன அரசியல் பண்றாங்க.

இதெல்லாம் கடைசி வரைக்கும் நீடிக்குமா. தராதரம் இல்லாம போயிக்கிட்டு இருக்கு. நான் தான் ராஜா; நான் தான் மந்திரின்னு இருந்தா, அழிவு வெகு சீக்கிரம் வந்துரும். அது உங்களுக்கு மட்டுமல்ல; எல்லாத்துக்கும் உண்டு. எனக்கும் தான்; உங்களுக்கும் தான். நீங்கள் வைத்திருக்கிற மாவட்ட செயலர், ஒன்றிய செயலருக்கும் தான்.

நீங்க நியமிச்சிருக்கிற மாவட்ட செயலர், ஒன்றிய செயலரை வச்சு, தெற்கு தொகுதி வேண்டாம், 10 தொகுதியில ஒத்த தொகுதி கவுண்டம்பாளையத்தை ஜெயிச்சுக் காட்டுங்க. நீங்க ஜெயிச்சீங்கன்னா, நான் அரசியலை விட்டே ஓடிப்போயிடுறேன். இதை மாற்றுக் கட்சிக்காரங்க சொல்லணும். சொந்தக் கட்சிக்காரனே மனம் வெதும்பி சொல்றேன். இது அரசியலா. நீங்கள் நியமிச்சிருக்கிற நிர்வாகிகள் லட்சணம் என்ன.

கவுண்டம்பாளையத்துல ஜெயிச்சுக் காட்டுங்க; எனக்கு ஏகப்பட்ட தொழில் இருக்கு; அரசியலை விட்டு போயிடுறேன். கவுண்டம்பாளையம் தோத்தா, கோவை மாவட்ட அரசியல்லயே நீங்க இருக்கக் கூடாதுங்க. மனம் ரொம்ப வெம்பி போயிதான் இப்பதிவை போடுகிறேன். தப்பா நினைக்காதீங்க. ஒவ்வொன்னுக்கும் ஒங்க கால்ல விழ முடியாது.

இவ்வாறு, அந்த நிர்வாகி பேசியுள்ளார்.