கருப்பு சட்டையும், ராகுலின் கோபமும்!
19 சித்திரை 2026 ஞாயிறு 08:41 | பார்வைகள் : 190
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது. இந்த மசோதாக்களை தி.மு.க., உட்பட, 'இண்டி' கூட்டணி கட்சிகள் எதிர்க்கின்றன. தங்கள் எதிர்ப்பை காட்ட, தி.மு.க., - எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து பார்லிமென்டிற்கு வந்தனர். இவர்களோடு, இரண்டு காங்., - எம்.பி.,க்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
காங்கிரசை சேர்ந்த புதுச்சேரி லோக்சபா எம்.பி., வைத்திலிங்கம் கருப்பு சட்டை அணிந்திருந்தார். அவரை ராகுல் அழைத்து, 'இந்த மாதிரி கருப்பு சட்டை அணிந்தபடி, பார்லிமென்டிற்கு வரக்கூடாது' என கோபப்பட்டாராம். உடனே, கருப்பு சட்டையை மாற்றி விட்டு, வெள்ளை சட்டை அணிந்து சபைக்கு வந்தாராம் வைத்திலிங்கம். இன்னொரு தமிழக காங்., - எம்.பி.,யும் சட்டையை மாற்றி விட்டாராம்.
ராகுல் லோக்சபாவில் பேசும் போது, டி.ஆர்.பாலுவை தவிர மற்ற தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளியே சென்று விட்டனராம். தவிர, தி.மு.க., - எம்.பி.,க்களை ராகுல் கண்டுகொள்வதோ, பேசுவதோ கூட இல்லையாம். இதற்கிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் சர்ச்சைக்குரிய மசோதாக்களை எரித்ததும், ராகுலுக்கு பிடிக்கவில்லையாம்.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை, ஒரு பொது மேடையிலேயே கிழித்து எறிந்தவர் ராகுல். சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஸ்டாலின் எரித்தது குறித்து பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது?' என, தி.மு.க., மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஓட்டுகள் காங்கிரசுக்கும், காங்., ஓட்டுகள், தி.மு.க.,விற்கும் போவது சந்தேகம் தான் என்கின்றனர் இரண்டு கட்சியினரை சேர்ந்த தலைவர்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan