இங்கிலாந்தில் மூளைக்காய்ச்சல் -அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்
18 சித்திரை 2026 சனி 14:39 | பார்வைகள் : 302
இங்கிலாந்தில் சமீபத்தில் நகரமொன்றில் பரவிய மூளைக்காய்ச்சலுக்கு இருவர் பலியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், மேலும் ஒரு நகரத்தில் மூளைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள Canterbury நகரில், இரண்டுபேர், மெனிஞ்சைட்டிஸ் (meningitis) என்னும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள்.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள Weymouth நகரிலும் மூன்று பேருக்கு மூளைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக மூளைக்காய்ச்சல் மற்ற தொற்றுநோய்களைப் போல வேகமாக பரவுவதில்லை. Canterbury நகரில் மூளைக்காய்ச்சல் அப்படி வேகமாக பரவியது அபூர்வமான ஒரு விடயமே என்கிறார்கள் அதிகாரிகள்.
அத்துடன், Canterburyயில் மூளைக்காய்ச்சல் பரவியதற்கும் Weymouth நகரில் பரவும் மூளைக்காய்ச்சலுக்கு தொடர்பில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், Canterburyயைப் போல வேகமாகவோ, கடுமையாகவோ Weymouth நகரில் மூளைக்காய்ச்சல் பரவவில்லை என்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், அவர்களுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு ஆன்டிபயாட்டிக்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், Canterburyயைப் போல Weymouthஇலும் மூளைக்காய்ச்சல் பரவக்கூடும் என பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பயம் இருக்கும் என்பதால் அப்பகுதியில் வாழ்பவர்களுக்கு தடுப்பூசி மற்றும் ஆன்டிபயாட்டிக்குகள் கொடுக்கப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan