தமிழகத்தை சீரழித்த திமுக-காங் கூட்டணியை விரட்டியடிப்போம்: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
18 சித்திரை 2026 சனி 08:28 | பார்வைகள் : 224
தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொருப்பாளருமான பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மே ற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் 29 வினாடிகள் கொண்ட ஏஐ வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு, மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் என தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம். மாற்றத்திற்கான வழிகாட்டி தேஜ கூட்டணியை ஆதரிப்போம். இவ்வாறு பீயூஷ் கோயல் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan