அமெரிக்க முன்னிலையில் இஸ்ரேல்–லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்
17 சித்திரை 2026 வெள்ளி 11:52 | பார்வைகள் : 185
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.
இன்று 17.04.2026 அதிகாலை 2.30 முதல் இந்த போர் நிறுத்தம் அமுலாகியுள்ளது. லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது அமைதிக்கான ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க" வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.
நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா, போர்நிறுத்தத்திற்கு முன்னதாக இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தம் தொடர்பான விபரங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. வொஷிங்டனில் இந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த போர்நிறுத்தமானது இஸ்ரேல் அரசாங்கத்தினால் காட்டப்பட்ட ஒரு 'நல்லெண்ணச் சமிக்ஞை' என அமெரிக்கா விபரித்துள்ளது.
இரு நாடுகளும் போரில் ஈடுபடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் முன்னிலையில் நல்லெண்ண அடிப்படையில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர இணக்கம் தெரிவித்துள்ளன.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில், இரு தரப்பு சம்மதத்துடன் இந்த 10 நாள் போர்நிறுத்தம் மேலும் நீடிக்கப்படலாம்.
போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், திட்டமிடப்பட்ட அல்லது உடனடியாக நடைபெறக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
போர்நிறுத்தம் தொடங்கியவுடன், ஹிஸ்புல்லா மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்படாத ஆயுதமேந்திய குழுக்களைக் கட்டுப்படுத்த லெபனான் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
லெபனானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான முழுமையான பொறுப்பை அந்த நாட்டு அரசாங்கமே ஏற்கும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வழிநடத்துமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேலும் லெபனானும் கோரிக்கை விடுத்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan