திமுகவில் ஆணாதிக்கம் அதிகம்
17 சித்திரை 2026 வெள்ளி 14:11 | பார்வைகள் : 1185
மதுரையில் தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரித்ததோடு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது. இதற்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். திமுகவில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்தால் பெண்கள் முன்னேறிவிடுவார்கள் என்ற பயத்தில் திமுகவினர் நாடகமாடி வருகின்றனர்.
மக்கள் நலன்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்களை திசை திருப்பவே நகல் எரிப்பு போராட்டங்களை நடத்துகின்றனர். சுந்தர்.சி கேள்வி கேட்ட பிறகு தான் ஒரே நாள் இரவில் சாலைகளை சுத்தம் செய்கின்றனர். தெரு விளக்குகள் கூட சரியாக இல்லை. அதை சரி செய்கின்றனர்.
பத்து வருடங்கள் இந்த தொகுதியில் உள்ள அமைச்சர் செய்ய முடியாததை சுந்தர்.சி பத்து நாட்களில் செய்து முடித்துள்ளார். பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது இருக்கும் எம்.எல்.ஏ. வேண்டாம் என மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். எனவே சுந்தர்.சி கண்டிப்பாக வெற்றி பெறுவார்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan