Paristamil Navigation Paristamil advert login

மகளிர் இட ஒதுக்கீட்டை அரசியலாக்கும் தி.மு.க.,: அமித் ஷாவிடம் பேசிய பழனிசாமி

மகளிர் இட ஒதுக்கீட்டை அரசியலாக்கும் தி.மு.க.,: அமித் ஷாவிடம் பேசிய பழனிசாமி

17 சித்திரை 2026 வெள்ளி 09:44 | பார்வைகள் : 190


தொகுதி மறுவரையறையை தி.மு.க., அரசியலாக்கி வருவதால், இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியதாக தெரிகிறது.

தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 'லோக்சபா தொகுதி எண்ணிக்கையை அதிகரித்தால், தமிழக தொகுதிகள் குறைந்து, உ.பி., உள்ளிட்ட வட மாநில தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும்' என தி.மு.க., அரசியலாக்கி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,வினர் நேற்று கருப்புக் கொடி மற்றும் தொகுதி வரையறை மசோதா நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினர். தி.மு.க.,வின் இந்த போராட்டம், பா.ஜ., கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் பேசிய பழனிசாமி, 'தமிழகத்திற்கான தொகுதிகள் குறையும் என தி.மு.க., பிரசாரம் செய்கிறது. எனவே, இதை முறியடிக்கும் வகையில், மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்' என வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் வெளியிட்ட பதிவில், 'தமிழக லோக்சபா தொகுதி எண்ணிக்கை 20 அதிகரித்து, 59 ஆகப்போகிறது. பிறகுஎதற்காக ஸ்டாலினும்,தி.மு.க.,வினரும் மசோதா நகலை எரிக்கின்றனர் எனதெரியவில்லை. தி.மு.க., வின் இந்த செயல், நாட்டுக் கும் பெண்களுக்கும் எதிரானது' என குறிப்பிட்டுள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்