Paristamil Navigation Paristamil advert login

Gare de Lyon தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடல் – பெரியளவிலான புதுப்பிப்பு பணிகள் தீவிரம்!!

Gare de Lyon  தொடருந்து  நிலையம் தற்காலிகமாக மூடல் – பெரியளவிலான புதுப்பிப்பு பணிகள் தீவிரம்!!

16 சித்திரை 2026 வியாழன் 15:49 | பார்வைகள் : 1470


Gare de Lyon தொடருந்து நிலையம், ஏப்ரல் 30ம் திகதி இரவு முதல் மே 3ம் திகதி மதியம் வரை பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாக  மூடப்படுகிறது. SNCF Réseau நிறுவனம் மேற்கொள்ளும் முக்கிய நவீனமயமாக்கல் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட இந்தப் பணிகள், பரிசின் முக்கிய தொடருந்து போக்குவரத்து மையங்களில் ஒன்றை நேரடியாக பாதிக்கின்றன.

இந்த பணிகளின் முக்கிய அம்சமாக, பழைய சிக்னல் கட்டுப்பாட்டு மையங்கள் மாற்றப்பட்டு, புதிய முழுமையான கணினி மயமான அமைப்புகள் நிறுவப்படுகின்றன. குறிப்பாக RER D தொடருந்து சேவைகளையும், பரிஸ் மற்றும் Villeneuve-Saint-Georges இடையேயான போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. சுமார் 500 நிபுணர்கள் 72 மணிநேரம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு இந்தப் பெரிய திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

இந்த மூடல் காரணமாக பல TGV மற்றும் சர்வதேச தொடருந்து சேவைகள் மாற்றப்பட்டுள்ளதுடன், பயணிகள் பிற பரிஸ் நிலையங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், Île-de-France பகுதியில் உள்ள தினசரி பயணிகள் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மே 4ம் திகதி முதல் 15ம் திகதி வரை உச்ச நேரங்களில் தொடருந்து சேவைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்