Paristamil Navigation Paristamil advert login

யாதான் சட்டம் - மீண்டும் விவாதம்!!

யாதான் சட்டம் - மீண்டும் விவாதம்!!

15 சித்திரை 2026 புதன் 20:53 | பார்வைகள் : 2424


Renaissance கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் யதாதான்
(Caroline Yadan) முன்வைத்த இந்தச் சட்டம்:

தீவிரவாதத்தைப் புகழ்ந்து பேசும் குற்றத்தை விரிவுபடுத்துகிறது. ஒரு நாட்டை அழிக்க அழைப்பு விடுப்பதை புதிய குற்றமாக உருவாக்குகிறது

ஏன் இது சர்ச்சையை ஏற்படுத்துகிறது?

சட்டத்தின் எதிர்ப்பாளர்கள்,

இது வாக்குச் சுதந்திரத்துக்கு ஆபத்தானது

இது இஸ்ரேல் அரசை விமர்சிப்பதைத் தடை செய்யும் முயற்சியாக மாறலாம்

இது யூத விரோதத்துடன் நேரடி தொடர்பில்லாத கருத்துகளையும் குற்றமாக்கும் அபாயம் கொண்டது.

தேசிய மனித உரிமைகள் ஆலோசனைக் குழுவான CNCDH (Commission nationale consultative des droits de l’homme) கூட
இந்தச் சட்டம் வாக்குச் சுதந்திரத்துக்கும் கல்வி சுதந்திரத்துக்கும் தீவிர அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது.

“Non à la loi Yadan” என்ற மனு  பாராளுமன்றத்தின் இணையதளத்தில் 700,000-க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெற்றுள்ளது.

இது இந்தச் சட்டம் எவ்வளவு பெரிய எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது என்பதை காட்டியுள்ளது.

கரோலின் யதாதான் தனது X கணக்கில் நீண்ட விளக்கமொன்றை வெளியிட்டார்:

இந்தச் சட்டம்
இஸ்ரேல் அரசை விமர்சிப்பதையும்,
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதையும்  
தடை செய்யவில்லை என்றும்

பல்கலைக்கழக ஆராய்ச்சி, கற்பித்தல், வரலாற்று பகுப்பாய்வு ஆகியவை
இந்தச் சட்டத்தின் குறிக்கோளில் இல்லை என்றும் உறுதிப்படுத்தினார்.