Renault நிறுவனம் உலகளவில் 1,600 முதல் 2,400 பணியிடங்களை நீக்க திட்டம்!!
14 சித்திரை 2026 செவ்வாய் 22:27 | பார்வைகள் : 9029
Renault நிறுவனம் உலகளவில் தனது பொறியாளர் பணியிடங்களில் 15% முதல் 20% வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் 2028க்குள் சுமார் 1,600 முதல் 2,400 வேலைகள் பாதிக்கப்படலாம். இந்த முடிவு நிறுவனத்தின் போட்டித்திறனை நிலைநிறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேரடி பணிநீக்கங்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை; அதற்கு பதிலாக மறுபயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் முன்கூட்டியே ஓய்வு போன்ற மாற்று வழிகள் பரிசீலிக்கப்படுகின்றன.
Renault நிறுவனத்தின் பொறியாளர்களில் பாதி பேர் பிரான்ஸில் உள்ளனர். முக்கியமான பொறியியல் செயல்பாடுகள், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் முன்நிலை வடிவமைப்பு போன்றவை பிரான்ஸிலேயே, குறிப்பாக Guyancourt பகுதியில் தொடரும். ஆனால், இந்த பணியிடக் குறைப்பு திட்டம் பிரான்ஸையும் பாதிக்கக்கூடும்.
மேலும், ருமேனியா, இந்தியா, தென் கொரியா, ஸ்பெயின், மொராக்கோ, துருக்கி மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் உள்ள பொறியியல் மையங்களில் பணியிட எண்ணிக்கை தனித்தனியாக தீர்மானிக்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan