Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்: பாஜ தேர்தல் வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்: பாஜ தேர்தல் வாக்குறுதி

15 சித்திரை 2026 புதன் 12:56 | பார்வைகள் : 317


தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கையை முன்னாள் தேசியதலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:

* தைப்பூசத் திருநாள் மாநில விழாவாக அறிவிக்கப்படும்.
* மின்சார இரு சக்கர வாகனம் வாங்க தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம்.
* அதிக பக்தர்கள் வரும் கோவில்களில், தினமும் 2 மணி நேரம் உள்ளூர் மக்களுக்கு பிரத்யேக தரிசனம் ஒதுக்கப்படும்.
* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.
* சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றை தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* தமிழகத்தில் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.
* ஆண்டுக்கு 3 விலையில்லா காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், அவை பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
* பாலியல், போக்சோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பஸ்கள் மற்றும் பல்கலைக்கழங்களில் 100 சதவீத கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மீண்டும் தீபம் ஏற்றுவதையும், அது முழுவதும் பின்பற்றுவதையும் உறுதி செய்வோம்.
* போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை; தமிழக போதைப்பொருள் ஒழிப்புத்துறை, கடலோர போதைப்பொருள் புலனாய்வு பிரிவு துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் நிதியுதவி வழங்குவோம்.
*  மாவட்ட அளவில் பிரமாண்ட எஃகு சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவோம்.
*  பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம்
வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும்.
* மீனவர்களுக்கு 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாாரணத் தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், மீன்பிடி குறைநிலை காாலத்திற்கான உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்துவோம்.  60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காாரணமாக இஎம்ஐ செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
* 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் செயல்முறைப் பயிற்சிகளுடன் கூடிய வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
* முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி  தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.

எழுத்துரு விளம்பரங்கள்