எரிபொருள் நெருக்கடி: விலை கட்டுப்பாட்டு திட்டம் முன்வைப்பு!!
14 சித்திரை 2026 செவ்வாய் 16:46 | பார்வைகள் : 3246
எரிபொருள் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அவசர நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், “எரிபொருள் நிலையத்தில் விலை உச்சவரம்பு” அறிமுகப்படுத்தும் திட்டம் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது.
அரசு தயாரித்து வரும் வரைவு உத்தரவு படி, ஒரு லிட்டருக்கு சுமார் 1.71 யூரோ என்ற அளவை மீறும் போது தானாகவே விலை கட்டுப்பாடு செயல்பாட்டுக்கு வரும் வகையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், டீசல் விலை சராசரியாக 2.31 யூரோவும், பெட்ரோல் விலை சுமார் 1.99 யூரோவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வுக்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், குறிப்பாக ஈரானைச் சுற்றியுள்ள போர் நிலைமைகள் காரணமாகும். இதன் விளைவாக, எரிபொருள் சந்தை விலைகள் 75% முதல் 100% வரை உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, விலை உயர்வால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு விநியோகஸ்தர்களின் லாப விகிதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அதாவது, நெருக்கடிக்கு முன் இருந்த அளவை விட அதிக லாபம் ஈட்ட முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
மேலும், இந்த நடவடிக்கை உடனடி விலை குறைப்பை ஏற்படுத்தும் நோக்கத்தைக் காட்டிலும், பொதுமக்களின் கொள்முதல் திறனை பாதுகாக்க அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதை காட்டும் ஒரு அரசியல் சைகையாகவும் பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு “மஞ்சல் அங்கி” போராட்டத்தைப் போன்ற மக்கள் எழுச்சி மீண்டும் ஏற்படாமல் தடுப்பதும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan