Paristamil Navigation Paristamil advert login

கமலுக்கு புகட்டிய பாடத்தை கரூர்காரருக்கும் புகட்டுவர்: வானதி தாக்கு

கமலுக்கு புகட்டிய பாடத்தை கரூர்காரருக்கும் புகட்டுவர்: வானதி தாக்கு

14 சித்திரை 2026 செவ்வாய் 08:30 | பார்வைகள் : 391


கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமலுக்கு, தெற்கு தொகுதி மக்கள் பாடம் புகட்டியதை போலகரூர் காரருக்கும் நல்ல பாடம்புகட்டுவார்கள் என்றுவானதி சீனிவாசன் கூறினார்.

உடல்நலக் குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பா.ஜ., எம்.எல்.ஏ.,வும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கே: கோவை வடக்கு தொகுதி வாக்காளர்களுக்கு இந்த சூழலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 
ப: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி கட்சி தொண்டர்கள், வேட்பாளர் சிகிச்சையில் இருந்தாலும், களப்பணியில் இறங்கி வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருவது புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வாக்காளர்கள், அக்கா உடம்ப பாத்துக்க சொல்லுங்க, நாங்க ஓட்டு போடுறோம், என்று நம்பிக்கையுடன் சொல்வது எனக்கு நெகிழ்ச்சியளிக்கிறது.

தெற்கு தொகுதிக்கு செய்ததை விட வடக்கு தொகுதிக்கு அதிக பணிசெய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., வரும் காலத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவுஎம்.எல்.ஏ.,

கே: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்துமா? 
ப: கோவைக்கு நான் புதிய நபர் அல்ல. மக்களோடு மக்களாக இருக்கிறேன். தெற்கில் மட்டுமே எனது பணி நிற்கவில்லை. கட்சி பொறுப்பால் மாவட்டம் முழுக்க பணி மேற்கொண்டேன். என்அர்ப்பணிப்பு பற்றிமக்களுக்கு தெரியும். அதனால் பின்னடைவு ஏதுமில்லை.


கே: தேர்தலில் எவ்வளவு ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்பீர்கள்?

ப: தெற்கு தொகுதியை விட பல மடங்கு அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவேன்.

கே: பா.ஜ.,முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும்வெயிலில் உங்களுக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
ப: தகவலறிந்தவுடன் தம்பி அண்ணாமலை உடனடியாக மருத்துவமனையின்தீவிர சிகிச்சைபிரிவுக்குவந்து நலம் விசாரித்தார்.

அக்கா கவலை வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். சிகிச்சை முடிந்து திரும்பியதும்பிரசாரத்தில் கையை மட்டும் உயர்த்தி வணக்கம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்கு தைரியம் கொடுத்தார்.வடக்கில் நான்கு இடத்தில் பிரசாரம் செய்தார். மீண்டும் பிரசாரம் மேற்கொள்வார்.

கே: நீங்கள் சொன்ன அந்த விஷக்கிருமி கோவையில் பரவி விடும் என்று பேசிக் கொள்கின்றனரே.
ப: கோவை மக்கள் அந்த விஷக்கிருமியை பரவ விட மாட்டார்கள், அவருக்கு தக்க பாடம் கற்றுக் கொடுத்து கரூருக்கே திருப்பி அனுப்பி வைப்பார்கள். கோவைக்கு இருக்கும் மாண்பை கொங்கு மக்கள் எப்போதும் காப்பார்கள்.

கமல்ஹாசனுக்கு தெற்கு தொகுதி பாடம் சொல்லிக்கொடுத்ததை போல கரூர் காரருக்கு நல்ல பாடத்தை அத்தொகுதி கற்றுக் கொடுக்கும்.

நான் மருத்துவமனையில் இருப்பதை தெரிந்து கொண்டு, நடிகை கஸ்துாரி நேற்றும், இன்று குஷ்புவும், ஏப்., 17 ம் தேதி டெல்லி முதல்வர் ரேக்கா குப்தாவும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

எழுத்துரு விளம்பரங்கள்