Paristamil Navigation Paristamil advert login

எரிவாயு விலை 15,4% உயர்வு!

எரிவாயு விலை 15,4% உயர்வு!

12 சித்திரை 2026 ஞாயிறு 21:53 | பார்வைகள் : 322


பிரான்சில், இயற்கை எரிவாயுவின்குறிக்கோள் விலை (prix repère ) மே 1, 2026 முதல் 15,4% உயரவுள்ளது என  சக்திவள ஒழுங்குமுறை ஆணையம் CRE (Commission de régulation de l’énergie)  அறிவித்துள்ளது.

இந்த உயர்வு, ஈரான் போரின் விளைவாக சர்வதேச எரிவாயு சந்தை விலைகள் அதிகரித்ததாலேயே ஏற்பட்டுள்ளது

எரிவாயு விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

“Prix repère” மூன்று பகுதிகளால் அமைந்துள்ளது:

வழங்கல் செலவு (approvisionnement) — சந்தை விலை, கொள்முதல் செலவுகள்

போக்குவரத்து மற்றும் சேமிப்பு கட்டணங்கள் (acheminement)

வரிகள் (CTA, TVA, accise)

போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது.


மே 1 முதல் வழங்கல் செலவு அதிகரிப்பதால் மொத்த விலையும் உயர்கிறது.

புதிய கட்டணம் என்ன? 
1 ஏப்ரல் 2026 : 139,12 €/MWh

1 மே 2026 : 160,54 €/MWh  
→ 15,4% உயர்வு

CRE கணக்கீட்டுப்படி, இது ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு சராசரியாக 6,19 € TTC கூடுதல் செலவாகும்.


யாருக்கு இந்த உயர்வு பொருந்தும்?

Prix repère-க்கு இணைக்கப்பட்ட ஒப்பந்தம் கொண்ட குடும்பங்களுக்கு விலை உயரும்.

நிலையான விலை (prix fixe) ஒப்பந்தம் கொண்டவர்களுக்கு ஒப்பந்த காலத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“Prix repère” என்றால் என்ன?

2023 ஜூன் 30 அன்று ஒழுங்குபடுத்தப்பட்ட எரிவாயு கட்டணம் TRVG (tarif réglementé du gaz) முடிவடைந்ததால், CRE ஒவ்வொரு மாதமும் குறிக்கோள் விலையை வெளியிடுகிறது.

இது சராசரி செலவின் மதிப்பீடு மட்டுமே, கட்டாய விலை அல்ல.

நுகர்வோருக்கு சந்தை ஒப்பந்தங்களை ஒப்பிட உதவும் “வழிகாட்டி” ஆக இது செயல்படுகிறது.

வழங்குநர்கள் தங்கள் ஒப்பந்தங்களை சந்தை விலை, போக்குவரத்து செலவு, சேமிப்பு செலவு போன்றவற்றின் அடிப்படையில் சுதந்திரமாக நிர்ணயிக்கிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்