Paristamil Navigation Paristamil advert login

தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

12 சித்திரை 2026 ஞாயிறு 09:46 | பார்வைகள் : 205


தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ். அதனால் அவர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பரமக்குடியில் காலை நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பரமக்குடி தொகுதி எமனேஸ்வரம் நெசவாளர்களிடம் குறை கேட்டார். பிறகு நிருபர்களிடம்  முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தேர்தல் பிரசாரம் எப்படி இருந்தது நீங்கள் பார்த்தீர்களா? மீடியா நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் மிகைப்படுத்தி தான் சொல்லுவேன். நீங்கள் தான் விமர்சனம் செய்து எழுதுகிறவர்கள்.

தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ். அதனால் அவர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கிறார். நடைபயிற்சி நான் வழக்கமாக மேற்கொள்வது தான். தேர்தல் நேரம் என்பதால் மக்கள் என்னை வந்து சந்திக்கிறார்கள். அதிமுகவின் முகமூடியை போட்டு கொண்டு தான் பாஜ தமிழகத்திற்குள் உள்ளே வருகிறது. அதுதான் உண்மை. அரசு அதிகாரிகள் மாற்றம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கேள்வி: ஜனநாயகன் படம் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். தியேட்டரில் வெளியாகுவதற்கு முன்பே ஆன்லைனில் வெளியாகி விட்டதே?

முதல்வர் ஸ்டாலின்: அதை பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

கேள்வி: படம் வெளியானதற்கு துணை முதல்வர் உதயநிதி காரணம் என்று ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டி இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்:

அப்படியா, அது தெரியவில்லை. ஆதவ் அர்ஜூனா நியூஸ் எல்லாம் நான் படிக்கிறது இல்லை.

கேள்வி: திமுக- தவெக இடையே தான் போட்டியே என விஜய் தொடர்ந்து கூறி வருகிறார்?

முதல்வர் ஸ்டாலின்: நான் அது பற்றி எல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை, நோ கமென்ட்ஸ்

எழுத்துரு விளம்பரங்கள்