Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ் தொண்டர்கள் விஜய் பக்கம் இல்லை

காங்கிரஸ் தொண்டர்கள் விஜய் பக்கம் இல்லை

12 சித்திரை 2026 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 190


ரப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மேலிடப் பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், கிரீஷ் ஷோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர். கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் கிரீஷ் ஷோடங்கர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் டில்லி நிர்வாகிகள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் அட்டவணை விரைவில் வெளியாகும். டில்லியில் பார்லிமென்ட் நடப்பதால், தமிழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் ராகுலால் பங்கேற்க முடியவில்லை; ஆனாலும், விரைவில் நேரம் ஒதுக்கி பிரசாரம் மேற்கொள்வார்.

காங்கிரஸ் கட்சியினர் விஜய் பக்கம் இல்லை. உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே கட்சியின் பக்கம் தான் நிற்பர். தி.மு.க., - காங்., கூட்டணியால், ராகுலுக்கு எந்த அதிருப்தியும் இல்லை, என்றார். 

எழுத்துரு விளம்பரங்கள்