Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் மரத்தான்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு !!

பரிஸ் மரத்தான்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு !!

11 சித்திரை 2026 சனி 17:34 | பார்வைகள் : 479


பரிஸில் நடைபெறவுள்ள Marathon de Paris 2026 போட்டியில் சுமார் 60,000 ஓட்ட வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரம் முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக Préfecture de Police கடுமையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டி சிறப்பாக நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக 12ம் மற்றும் 16ம் வட்டாரங்களிலுள்ள Charenton-le-Pont, Saint-Mandé, Boulogne-Billancourt ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் Rue du Faubourg Saint-Antoine, Avenue Daumesnil, Avenue de Gravelle, Boulevard d’Auteuil, Avenue Ingres மற்றும் Boulevard Bourdon உள்ளிட்ட பல சாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

img_69da69ef9bd33.jpg

மேலும் Avenue des Champs-Élysées, Place de la Concorde, Rue de Rivoli, Place de la Bastille, Avenue de l’Opéra மற்றும் Quai François-Mitterrand போன்ற முக்கிய இடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். Bois de Vincennes மற்றும் Bois de Boulogne வழியாகச் செல்லும் இந்தப் போட்டி காரணமாக பல சாலைகள் மூடப்படும்.

Porte de Charenton, Porte Dorée, Porte d’Auteuil, Porte de Passy போன்ற சுற்றுப்பாதை சாலைகளிலும் மற்றும் A13 அதிவேக நெடுஞ்சாலை வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்