Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் மகன் கதாநாயகனாகிறாரா?

 தனுஷ் மகன்  கதாநாயகனாகிறாரா?

10 சித்திரை 2026 வெள்ளி 16:55 | பார்வைகள் : 211


இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் ஒருபுறம் இசையமைப்பாளர் ஆக பிஸியாக முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மறுபுறம் சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் உள்ள போட்டோவை திரையிட்டு அது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது, "யாத்ரா விரைவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகுவதற்கான பயிற்சியில் உள்ளார். இதற்காக சிக்ஸ் பேக் உடலமைப்பை அவர் கட்டமைத்து வருகிறார். சரியான நேரம் வரும் அவரின் அப்பா தனுஷ் அதை குறித்து அறிவிப்பார்" என தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்