‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து ஷாருக்கான் விலகல்..?
10 சித்திரை 2026 வெள்ளி 16:51 | பார்வைகள் : 198
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ரஜினி தெரிவித்தார். மேலும் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது. பிரமாண்ட பொருட்செலவில் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பாலகிருஷ்ணா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ரஜினியின் முந்தைய படமான ‘கூலி’ படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆனால் அவர் கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோவாக என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அவர் படத்தில் நடிக்கவில்லையாம். ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க ஷாருக்கான் மறுத்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஷாருக்கான் தனிப்பட்ட முறையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு, “கிங் படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படத்துக்கான கெட்டப்பை மாற்ற முடியாது. இதனால் ஜெயிலர் 2- படத்தில் நடிக்க முடியாது. ஆனால், எதிர்வரும் படங்களில் கேமியோவில் நடிக்க அழைத்தால் ரெடியாக இருக்கிறேன்” என கூறினாராம்.
இதனால் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பவன் கல்யாண் நடிக்கும்பட்சத்தில் இது அவருடைய முதல் தமிழ் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan