2027 தேர்தலில் Rassemblement National வெற்றி பெறும் அபாயம் குறித்து Mbappéவின் கருத்துக்கு Bardellaவின் நையாண்டி பதில்!!
12 வைகாசி 2026 செவ்வாய் 22:33 | பார்வைகள் : 350
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் Rassemblement National (RN) வெற்றி பெறக்கூடும் என்ற கவலையை Kylian Mbappé வெளிப்படுத்தியதற்கு, Jordan Bardella பதிலடி கொடுத்துள்ளார்.
“அவர்கள் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், அது என் நாட்டிற்கு என்ன அர்த்தம் கொண்டது, என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன்,” என்று Vanity Fair இதழுக்கு அளித்த பேட்டியில் பிரான்ஸ் தேசிய அணியின் கேப்டன் Mbappé கூறினார். மேலும், “ஒரு கால்பந்து வீரர் விளையாடிக் கொண்டே அமைதியாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு நான் எதிராக இருக்கிறேன். நான் ஒரு குடிமகனும் கூட,” என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த Jordan Bardella, சமூக வலைதளமான X-ல் நையாண்டியாக பதிலளித்தார்: “Kylian Mbappé PSG-யை விட்டு சென்றபோது என்ன நடந்தது என்று எனக்கும் தெரியும்: அந்த கிளப் சாம்பியன்ஸ் லீக்கை வென்றது! இன்னும் ஒருமுறை கூட வெல்லக்கூடும்”
இந்த கருத்து, கடந்த சீசன் தொடக்கத்தில் Paris Saint-Germain (PSG) அணியை விட்டு சென்ற Mbappé-ஐ குறிவைத்து கூறப்பட்டது. பல ஆண்டுகள் முயன்றும் முடியாத நிலையில், PSG கடந்த ஆண்டு UEFA Champions League கோப்பையை வென்றது. இப்போது 2026 இறுதிப்போட்டியில், மே 30 அன்று Budapest நகரில் நடைபெறும் போட்டியில் மீண்டும் கோப்பையை வெல்ல முயற்சிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan