ஆண்டவன் மீது ஆணை... திரைப்பட பாணியில் பதவியேற்ற முதலமைச்சர் விஜய்
11 வைகாசி 2026 திங்கள் 12:51 | பார்வைகள் : 1031
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட விழாவில் ஆண்டவன் மீது ஆணையாக உறுதியேற்கிறேன் என்று விஜய் கூறியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லியிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
விஜய் மட்டுமல்லாது அடுத்து அமைச்சராக பதவியேற்ற என். ஆனந்தும் ஆண்டவன் மீது ஆணையாக பதவியேற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்.
பொதுவாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, டெல்லியிலும் பதவியேற்கும் உறுப்பினர்கள் பலரும் உளமாற பதவியேற்கிறேன் என்று சொல்லியே பதவியேற்பார்கள்.
ஆனால் விஜய், பதவியேற்கும்போது ஆண்டவன் மீது ஆணையாக என்று திரைப்பட பாணியில் உறுதியேற்றுள்ளார். மதவாத சக்திகள் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஜய்க்கு ஆதரவு என்று இடதுசாரிகள் கூறியிருந்தனர்.
ஆனால், இடதுசாரி தலைவர்களுக்கு நன்றி சொல்ல சென்ற விஜய் கையில் சிவப்பு கயிறு நெற்றியில் திலகமிட்டு சென்றிருந்தார். அப்போதே பலரும் விஜய் குறித்து எச்சரிக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மாறியது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை இல்லை என்பதால் கடந்த 5 நாட்களாக போராடி பிற கட்சிகளின் ஆதரவை பெற்று தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பொறுப்புக்கு வர இருக்கிறார்.
10.05.2026 காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "தமிழ்நாடு முதலைச்சராக பதவியேற்றுள்ள திரு சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" என தெரிவித்துள்ளார்.
அதே போல் ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் தனது பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு.விஜய் அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
நன்றி லங்காஸ்ரீ
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan