பிரித்தானியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட 7 ஆபத்தான செடிகள்
9 வைகாசி 2026 சனி 15:41 | பார்வைகள் : 1178
பிரித்தானியாவில் சில அழகான செடிகள் தோட்டங்களில் வளர்க்கத் தடை செய்யப்பட்டுள்ளன.
அவை சுற்றுச்சூழலுக்கும், வீடுகளுக்கும், நீர்நிலைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
1- Japanese Knotweed (ஜப்பானிய நாட்வீட்)
இந்த தாவரம் வேகமாக வளர்ந்து கட்டிட அடித்தளத்தையே சேதப்படுத்தும். சரியாக அகற்றப்படவில்லை என்றால் சட்ட பிரச்சினை ஏற்படும்.
2- Giant Hogweed (ராட்சத ஹாக்வீட்)
இந்த செடியை தொடும்போது தோலில் எரிச்சல், புண்கள் ஏற்படும். சாலைகள், நதிக்கரைகள் அருகே வேகமாக பரவும்.
3- Himalayan Balsam (இமயமலை பால்சம்)
இந்த தாவரம் அழகான இளஞ்சிவப்பு மலர்கள் கொண்டது. ஆனால் வேகமாக பரவி பிற செடிகளை அழித்து விடும். நதிக்கரைகளில் மண் அரிப்பை அதிகரிக்கும்.
4- Water Hyacinth (ஆகாயத்தாமரை)
ஆகாயத்தாமரை நீரில் மிதக்கும் செடி. குளங்களை மூடி சூரிய ஒளி, ஆக்சிஜன் குறைவதால் மீன்கள், பூச்சிகள் பாதிக்கப்படும்.
5- New Zealand Pygmyweed (நியூசிலாந்து பிக்மிவீட்)
சிறியதாகத் தோன்றினாலும், குளம், ஏரிகளை முழுவதும் மூடி விடும். சிறிய துண்டுகள் கூட புதிய செடியாக வளரக்கூடியதால் அகற்றுவது கடினம்.
6- Parrot’s Feather (கிளியின் இறகு)
குளங்களில் அழகாகத் தோன்றும். ஆனால் வேகமாக பரவி நீரில் ஆக்சிஜன் குறைவுக்கு காரணமாகிறது.
7- Skunk Cabbage (ஸ்கங்க் முட்டைக்கோஸ்)
ஈரமான நிலங்களில் பரவி உள்ளூர் சூழலை அழிக்கும். பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் இது களையாக கருதப்படுகிது.
இந்த செடிகள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதால், வளர்ப்பது, விற்பது, அகற்றுவது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan