Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

1 வைகாசி 2026 வெள்ளி 11:09 | பார்வைகள் : 172


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக அமைச்சர்கள், திமுக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி மே 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, என்.டி.டி.வி., பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக்- பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ், எஸ்.ஏ.எஸ்., குரூப், அக்னி, மின்னம்பலம், ரெட் பேரட் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழக அமைச்சர்கள், திமுக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எ.வ.வேலு, பெரிய கருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர்.

பிரகாசமாக இருக்குது!

நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: திமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு உண்டு. அரசியல் தெரிய வேண்டும். எங்களுக்கு திடமான நம்பிக்கை இருக்கிறது. திமுக வெற்றி பெறும். திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.