வெற்றி பெற்ற பின் என்னுடன் இருப்பீர்களா?
1 வைகாசி 2026 வெள்ளி 10:30 | பார்வைகள் : 140
வெற்றி பெற்ற பின், என்னுடன் இருப்பீர்களா,” என, தமிழக வெற்றி கழக வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார். பிற 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். இடைப்பாடியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, அந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு விஜய் ஆதரவு அளித்தார். அதேபோல், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிட்ட அனைவரையும், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேற்று வரவழைத்து, விஜய் சந்தித்து பேசினார்.
சந்திப்பு குறித்து தவெக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேர்தல் முடிவு தவெகவுக்கு சாதகமாக வரும் என, விஜய் உறுதியாக இருக்கிறார். ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், இரட்டை இலக்கத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என நம்புகிறார்.
தமிழகம், புதுச்சேரியில், தவெக சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்களில், 118 பேர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள். அவர்களில் பலரை, விஜய் இதுவரை சந்தித்தது இல்லை. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோதுதான், அவர்களை முதல் முறையாக விஜய் பார்த்தார். பிரசாரத்தின்போதும், 40க்கும் குறைவான வேட்பாளர்களைதான் விஜய் சந்தித்தார். இதனால், வேட்பாளர்களில் பலர், கட்சி மீதும் விஜய் மீதும் பிடிப்பு இல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தவெக - எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்கவும் வேட்பாளர்களுடன் நல்லதொரு உறவை ஏற்படுத்தவும் இந்த சந்திப்பு நடந்தது. மண்டல வாரியாக வேட்பாளர்களை சந்தித்த விஜய், முதல் தேர்தல் அனுபவம் எப்படி இருந்தது என அவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், 'எல்லாரும் கடுமையாக தேர்தல் பணி செய்திருப்பீர்கள். அதற்கான பலனை மக்கள் நமக்கு நிச்சயம் தருவர். நான் உங்களுடன்தான் இருப்பேன். நீங்களும் வெற்றி பெற்ற பின் என்னுடன் இருக்க வேண்டும். கருத்துக் கணிப்புகள் எல்லாம், நம் மீது கடுப்பில் விட்ட கணிப்புகள். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தேர்தல் முடிந்து விட்டது என நினைத்து வீட்டில் இருக்க வேண்டாம். ஓட்டு எண்ணிக்கை அன்று காலை 6:00 மணிக்கு, ஓட்டு எண்ணும் மையத்தில் நீங்கள் இருக்க வேண்டும். வெற்றி சான்றிதழை வாங்கியதும் பனையூர் அலுவலகத்துக்கு வர வேண்டும்; வேறு எங்கும் செல்ல வேண்டாம்.
ஓட்டு எண்ணிக்கையின்போது, அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உழைப்புக்கேற்ற பலனை நான் கொடுப்பேன்' என விஜய் பேசினார்.
மேலும் வேட்பாளர்களிடம், 'தேர்தலில் வெற்றி பெற்ற பின், என்னுடன் இருப்பீர்களா?' என கேட்டார். அனைவரும், 'கண்டிப்பாக இருப்போம்' என பதில் அளித்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓட்டு எண்ணிக்கையின்போது எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து, வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார். தேர்தல் தோல்வியை பார்க்கும்போது திமுக வேறு மாதிரி ஆகிவிடும். அதை சமாளிக்க தேர்தல் கமிஷன் தயாராக இருக்க வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எப்போதும் உண்மையாக இருக்காது. திருவிழா போல், தவெகவுக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். வரும் 4ம் தேதி உண்மை தெரிந்துவிடும். இனி கணிப்புகள் குறித்து பேச வேண்டாம். நிர்மல் குமார், இணை பொதுச்செயலர், தவெக
கட்சியின் தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறுகையில், “இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு, தேர்தல் முடிவுகள் இருக்கும். இது ஒரு அதிசயம். உலக வரலாற்றில் விசில் சத்தம் கேட்பது இதுவே முதல் முறை. 200க்கும் அதிகமான தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். அதன் பின்புதான், தலைவர் விஜயின் மவுசு உலகத்துக்கே தெரியவரும்,” என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan