Paristamil Navigation Paristamil advert login

மே 1 எந்த கடைகள் திறந்திருக்கும், எவை மூடப்படும்?

மே 1 எந்த கடைகள் திறந்திருக்கும், எவை மூடப்படும்?

29 சித்திரை 2026 புதன் 21:51 | பார்வைகள் : 448


கடந்த ஆண்டு, மே 1 அன்று பேக்கரிகள் மற்றும் மலர் கடைகள் திறப்பது குறித்து பல விவாதங்கள் நடந்தன. மற்ற தொழில்களும் வேலை செய்ய அனுமதி கோரின. இந்த ஆண்டு, சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அனைத்து கடைகளுக்கும் இல்லை.

மே 1 பொதுவாக muguet மலரை நினைவூட்டும் நாள். ஆனால் முக்கியமாக, இது பிரான்சில் சட்டப்படி கட்டாயமாக வேலை இல்லாத, சம்பளம் வழங்கப்படும் ஒரே நாள். சட்டத்தை மீறினால், ஒரு பணியாளருக்கு 750 யூரோவும், சிறாரானால் 1500 யூரோவும் அபராதம் விதிக்கப்படும். எனினும், வேலை நிறுத்த முடியாத சேவைகளுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் அந்த நாளில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த தொழில்கள் இதில் சேரும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

திறந்திருக்கும் கடைகள்

பேக்கரிகள் (Boulangeries-pâtisseries)

இந்த ஆண்டு, பேக்கரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால்:

  • பணியாளர்கள் விருப்பத்துடன் மட்டுமே வேலை செய்ய வேண்டும்
  • எழுத்து மூலம் ஒப்புதல் அவசியம்
  • இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்

மலர் கடைகள் (Fleuristes)

மலர் கடைகளும், தோட்டக்கலை கடைகளும் திறக்க அனுமதி. muguet மலர்கள் விற்பனை இந்த நாளில் மிகப் பெரிய வருமானத்தை உருவாக்குகிறது.

சிறிய உணவுக் கடைகள் (Supérettes)

Franprix, Carrefour City போன்ற அருகிலுள்ள கடைகள் திறக்கலாம், ஆனால்:

  • உரிமையாளர் மட்டும் இயங்க வேண்டும்
  • பணியாளர்கள் வேலை செய்யக்கூடாது

24/7 சேவைகள்

மருத்துவமனைகள், அவசர சேவைகள், பாதுகாப்பு சேவைகள் போன்றவை இயல்பாக செயல்படும்.

மருந்தகங்கள் (Pharmacies)

சில மருந்தகங்கள் மூடப்பட்டாலும், அவசர சேவை அடிப்படையில் சில திறந்திருக்கும்.

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

பெரும்பாலும் திறந்திருக்கும்.

திரையரங்குகள் மற்றும் சில அருங்காட்சியகங்கள்

அனைத்து திரையரங்குகளும் திறந்திருக்கும் ஆனால் லூவர் போன்ற பெரியவை மூடப்படும்.

பெரும்பாலும் சில விதிவிலக்குகள் உடன் மூடப்படும்.

ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள்

பெரும்பாலும் மூடப்படும்.

சில தானியங்கி காசாளர் இயந்திரங்கள் மட்டுமே உள்ள கடைகள் உரிமையாளர் மட்டுமே இயக்கலாம். 

மாமிச கடைகள் மற்றும் மீன் கடைகள்

சில திறக்கலாம், ஆனால் சட்ட ரீதியான அபாயம் உள்ளது.

உணவகங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள் 

சட்டம் தெளிவாக இல்லை. திறந்தால் அபராதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

சந்தைகள் மற்றும் நீச்சல் குளங்கள்

சில திறந்திருக்கும், சில மூடப்படும். நகராட்சியை சரிபார்க்க வேண்டும்.

முற்றிலும் மூடப்படும் இடங்கள்

  • அரசு அலுவலகங்கள் (மாவட்ட அலுவலகம், பாடசாலைகள், சமூக சேவைகள்)
  • நூலகங்கள்
  • விளையாட்டு மையங்கள்
  • ஆடைகள், அழகு சாதனங்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற கடைகள்
  • ஷாப்பிங் மால்கள்

போக்குவரத்து

பெரும்பாலான நகரங்களில் (Lyon, Marseille, Toulouse போன்றவை) போக்குவரத்து இயங்காது ஆனால் les vélos en libre-service , co-voiturage கிடைக்கும்.

பரிஸில் மட்டும் விதிவிலக்காக போக்குவரத்து இயல்பாக இயங்கும் (சில பாதைகளில் சிறிய தடங்கல்கள் இருக்கலாம்)